என் இதய தெய்வத்துக்கு!

அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர் பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கு அருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங் கனிந்த நன்றிகள்!May The World Be Blessed For Long With The Feet Of Guru Ramana Who Abides As That Silent Principle,Which Absorbes All Of Us & Remains By It Self As The Root Of The Three Principles (SOUL, WORLD, ESWARA)Spiritual Instruction. ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

Thursday, 19 September 2013

வாழ்வு ஒரு திட்டமிட்ட கணக்கு!!!

* முற்பிறவியில் புண்ணிய வினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவவினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.
* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான். பாலன்ஸ் ஷீட் என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டுவராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.
* விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இருப்பதற்காகவும், தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது.
* பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச்சுமைகளை சேர்த்துக்கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது.
"அகந்தை அகலட்டும்"


* நெருப்பின் சுடரிலிருந்து பொறிகள் கிடைக்கின்றன. ஆனால், அவை வெளியில் சிதறி விழுகின்றன. ஆனால், நாம் ஒரு போதும் கடவுளுக்கு வெளியில் இல்லை.
* சிவனடியில் முழுமையாகச் சரணடைந்துவிட்டால் நிறைந்த அமைதி கிடைப்பதுடன் ஆன்ம உணர்வு கிடைக்கிறது.
* இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதி
ஆகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால்
ஏமாறுவதில்லை, அவர் காண்பதெல்லாம் அகந்தை, எந்த அளவுக்குப் பாக்கி இருக்கிறது என்பதும், அதனை எந்த அளவில் அழிக்கலாம் என்பதுமேயாகும்.
* தெய்வீகம் அனைத்துக்காலங்களிலும் அனைத்து
சூழல்களிலும் பரவி நிற்கிறது. தனி மனிதர் தன்
விருப்பம் போல் நடக்க முடியாது, தெய்வீகத்தின்
சக்தியை உணர்ந்து நடக்க வேண்டும்.
* கடவுள் அல்லது குருவிடம் ஒருவர் சரணடைந்து
விட்டால், அவர் சரணடைந்த சக்தியே அவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்கிறது. கடவுள் அல்லது குருவை நம்பாத போது தான் சந்தேகம் எழுகிறது.
- ரமணர்

Wednesday, 11 September 2013

ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!

                                                            
                                                                  பகவான் ரமணர்
1.         மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.
2.         சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத் சங்கமுமே!. மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.
3.         கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.
4.         கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட  கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.
5.         தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
6.         மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.
7.         குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.
8.         தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.
9.         உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின் போது சில வகை ஒலிகள் கேட்கும். காட்சிகள் தெரியும். ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும். ஆனாலும் இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
10.       மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.
11.       ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம்.  ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.
12. இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும். There is no any Short Routes to Reach the Feet of God. 
 
 

Tuesday, 10 September 2013

சும்மா இருப்பது சிரமம்!!!

* கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப்படமாட்டார்கள்.
* நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.
* கடவுளை உணர்வதற்கு நாம் செய்ய வேண்டியது சும்மா இருப்பது தான், சும்மா இருப்பதைப் போல சிரமமான செயல் வேறு இல்லை.
* அமைதியே நமது இயல்பான சுபாவம். எனவே அதைத் தேடவேண்டாம். உபத்திரவப்படுத்தும் எண்ணங்களை ஒழித்தாலே போதும்.
* நாமே தான் நமது பிரச்னைகளுக்கு மூலகாரணம், எனவே, நாம் யார் என்பதை நன்கு புரிந்து கொண்ட பிறகு, கடவுள் ஆராய்ச்சியில் இறங்குவது நல்ல பயன் தரும்.
* மனதை மெதுவாக சிறுகச் சிறுக அடக்கி தன் வழிக்குக் கொண்டு வரவேண்டும், இதற்கு கடும் பயிற்சியும் வைராக்கியமும் தேவை.
* அறிவு, நம்மிடத்திலுள்ள அறியாமையைப் போக்குகிறது, அது புதிதாக எதையும் உருவாக்குவதில்லை.
- ரமணர்
"பிராயச்சித்தம் சொல்லட்டுமா "


*சிவனடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால் அமைதியும், ஆன்மிக உணர்வும் கிடைக்கும். அந்நிலையில் நம் குறைகளைப் பற்றி முறையிடும் எண்ணம் தோன்றாது. முழுமையான பக்தியின் இயல்பு இது தான்.
* புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள், புதிய விஷயங்ககளைத் தேடி அலையாதீர்கள், நீங்கள் செய்த தவறுகளிலிருந்து மீளுவதற்கு உரிய பிராயச்சித்தம் இதுவே. ஆனால், மனிதர்களோ இதற்கு நேர்எதிர்மாறாக அலைந்து துன்பத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.
* கடவுளிடமோ, குருவிடமோ சரணடைந்துவிட்டால், அவரது அருளே ஒருவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதன்பின், ஒருவர் எதற்கும் கவலைப்படத் தேவையில்லை.
* இறைவன் காப்பாற்றுவான் என்ற எண்ணத்தில் உறுதி இருந்தால் மனம் தெளிவடையும். அப்போது தவறு செய்ய இடம் உண்டாகாது.
* "கடவுளிடம் சரணடைந்து விட்டேன்' என வெறும் வார்த்தையை மட்டும் உதிர்த்து பயனில்லை. உளப்பூர்வமாக அவரிடம் சரணடைய வேண்டும்.
- ரமணர்

Wednesday, 17 July 2013

இறைவனிடம் நம்மை அர்ப்பணிப்போம்!!!

*ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாட வேண்டும். இது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட உண்மையாகும். உள்மனதில் யார் அமைதியை ஏற்படுத்துகிறார்களோ அவரையே குருவாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
* பிறர் வேறு; நீ வேறல்ல. ஒருவருக்குக் கொடுத்தாலும், அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ ஒருவரைப் பழித்தாலும், ஏமாற்றினாலும் அது உன்னையே ஏமாற்றிக் கொண்டதாகும். அதனால், ஒவ்வொரு உயிரையும் தன்னுயிராக எண்ணி நேசிக்கக் கற்றுக்கொள்ளுங்கள்.
* சரணாகதி என்பதே வலிமை மிக்கப் பிரார்த்தனை.
கடவுள் நம்மைப் பற்றிய எல்லாச் செயல்களுக்கும் பொறுப் பேற்கிறார் என்ற நம்பிக்கை அவசியம். சரணாகதியாக இறைவனை நாடுபவர் முழுமையாகத் தன்னைக் கடவுளிடம் அர்ப்பணித்து விட வேண்டும்.
* சமுதாயம் என்பது உடம்பு போன்றது. தனி மனிதர்கள் அதன் அங்கங்கள். ஒருவன் தன்னைத் தானே திருத்திக் கொண்டால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும். எனவே, ஒவ்வொருவரும் சுயசீர்திருத்தம் செய்து கொள்வது அவசியம்.
-ரமணர்

Thursday, 11 July 2013



* "ராமா' என்ற சொல்லில் "ரா' என்ற எழுத்து ஆன்ம சொரூபத்தை குறிப்பதாகும். "மா'என்ற எழுத்து "நான்' என்ற ஆணவத்தை குறிக்கிறது. ஒருவர் "ராமா' என்று இடையறாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தால், "மா' என்ற எழுத்து "ரா' என்ற எழுத்தில் ஐக்கியமாகி மறைந்துவிடுகிறது.
* "சரணாகதி' என்பது வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுள் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தால் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடு.
* இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கும் வரை சாதனைகளை தொடருங்கள். இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நின்று அதன் முழு பலனை தந்து விடும்.
* நான் பலவீனமானவன், தீயவன் என்று நினைப்பதுகூட மனிதன் செய்யும் பெருந்தவறாகும். உண்மையில் அவன் பலவீனனும் அல்லன்; தீயவனும் அல்லன், ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் படைத்தவனே ஆவான். அவனது உலகியல் பழக்க வழக்கங்களும், எண்ணங்களுமே அவனை பலவீனமாக்குகின்றன.
- ரமணர்

Thursday, 4 July 2013

பகவான் ரமணரின் அருள் விருந்து!!!


எல்லாம் கடவுள் செயல்

அது அது அதனதன் செயலைச் செய்யுமாறு அமைக்கப்பட்டிருப்பது கடவுளின் செயலாலேயே. ஜடப்பொருள்கள் கூட அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவரால் தான். சித்தப் பொருளாகிய உயிர்களும் அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவராலே. எல்லாம் அவர் செயல். எந்த மனிதனும் தான் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று கருதுகிறான். அதற்கென்று சில தொழில்களைச் செய்கிறான். ஆயினும் அத்தொழில்களின் பயனெல்லாம் ஒரே தன்மையையுடையனவாய் இருப்பதில்லை. எல்லாருடைய நோக்கமும் தொழிலும் ஒன்றாயிருக்க, ஏன் அதன் பயன் வேறுபடுகிறது? அங்கு கடவுள் தம் செயல் என்ற அறிவை அளிக்கிறார். அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. எவர்தான் முன்னுக்கு வருவதில் ஆசையில்லாதவர்? பிறர் விஷயத்தில் அவர்களுடைய நோக்கங்கள் எப்படியிருந்தாலும், தம் விஷயத்தில் அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. ஆகவே, ஒரே நோக்கமுடைய ஜீவர்களுடைய நிலையில் வேறுபாடு காணப்படுவதால், எல்லாம் கடவுள் செயல் என்றே கொள்ள வேண்டும். எல்லா ஜீவர்களுடைய நோக்கமும் ஒன்றுதான்; ஆயினும், அவரவர் முயற்சி வேறுபாட்டைப் பொறுத்து நிலைமை அமைகிறது. முயற்சி என்பது அந்தந்த ஜீவர்களின் உள்ளத்தில் தோன்றும் கற்பனை தான். கற்பனைக்கு மூலமாகிய நோக்கம் ஒன்று தான் என்றாலும், முயற்சியாகிய கற்பனை வேறுபடுவதற்கான காரணம் என்ன? அதுதான் கடவுள் செயல். ஆகையால் எல்லாமே கடவுளின் செயல் தான்..

Friday, 28 June 2013

நாயனா, சின்ன நாயனாவை சந்தித்த கதை!


"நாயனா"வும் ஸ்ரீ ரமணரும்


"நாயனா"

"சின்ன நாயனா"



அது 1906 ஆம் ஆண்டு.
இருபதே வயதான இளைஞன் அவர். கபாலி சாஸ்திரிஎன்று பெயர். அப்பா கன்னிமாரா நூலகத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர். மகனுக்கு, திருமயிலை இறைவனது பெயரை வைத்ததுடன், ஐந்து வயதிலேயே ஸ்ரீ வித்யா மந்திரமும் சொல்லிக் கொடுத்தாயிற்று. எட்டு வயதிலேயே வால்மீகி ராமாயண மூல பாராயணம் ஆரம்பித்தாயிற்று. தினசரி, திருவொற்றியூரில் அம்பிகைசன்னதியில் ஸ்ரீ வித்யா மந்திர ஜபம் செய்கிற பழக்கம். அப்படி, அம்பாள் முன் மந்திர ஜபம் செய்து கொண்டிருந்தநேரம், இரண்டு, மூன்று பேர்கள் வருகிறார்கள். அவர்களில் ஒருவர், மெலிந்த தேகம், ஆனால் அவருடைய தோற்றப் பொலிவு இவர் சாதாரண ஆள் இல்லை,என்பதைச் சொல்லாமல் சொல்லுகிறது.
அம்பிகை சன்னதி முன் வந்து வணங்கி, கடகடவென வடமொழியில்துதிக்க ஆரம்பிக்கிறார். இதற்கு முன்னாள் கேட்ட ஸ்லோகம், ஸ்தோத்ரங்கள் மாதிரி இல்லை, அப்போது தான் அம்பாள் பெயரில் இயற்றி அவள் முன்னாலேயே அரங்கேற்றம் செய்தது மாதிரி இருக்கிறது. அவரும், கூட வந்தவர்களும், போய் விட்டார்கள். இளைஞராக இருந்த கபாலி சாஸ்திரியை, இந்த நிகழ்வு மிகவும் கவர்கிறது.

மறுநாள், அதே நேரம், திருவொற்றியூர் கோவிலில், கபாலி சாஸ்திரி, மந்திர ஜபம் செய்து கொண்டிருக்கிறார். முந்தைய நாள் போலவே, அந்த மனிதர் மறுபடி வருகிறார். ஆர்வத்தோடு பார்த்துக் கொண்டிருந்த கபாலி சாஸ்திரியைக் கூப்பிட்டு, யார் எவர் என விசாரித்துத் தெரிந்து கொள்கிறார். தன்னை வாசிஷ்ட கணபதி முனி எனவும் அறிமுகம் செய்து கொள்கிறார். யார், எவர் என கணபதி முனி கேட்கும் போதே, முந்தைய நாள் தான் கேட்ட துதிகளை, ஒரு இழை பிசகாமல் திரும்பச் சொன்ன கபாலி சாஸ்திரியை அவருக்கு மிகவும் பிடித்துப் போகிறது.

திருவண்ணாமலையில், அதுவரை பிராம்மண சாமி என்று மட்டுமே அறியப் பட்டிருந்த ஸ்ரீ ரமணரை, ஸ்ரீ ரமண மஹரிஷி எனவும், பகவான் ஸ்ரீ ரமணர் என்றும் உலகுக்கு அறிவித்த, காவ்ய கண்டர் என்றும் வாசிஷ்ட கணபதி முனி என்றறியப்பட்ட மஹான் அவர். மகா தபஸ்வி.

ரமணராலே, "நாயனா" என்று அன்புடன் அழைக்கப் பட்டவர்.

சாத்திரம் கற்றவர், கவிஞர், ஸ்ரீ வித்யா உபாசகர், அஷ்டாவதானி, ஜோதிடமும், மந்திர சித்தியும் பெற்றவர். அப்படிப் பட்டவரோடு, கபாலி சாஸ்திரிக்குத் திருவொற்றியூர் கோவிலில் ஏற்பட்ட உறவு, குரு-சிஷ்யன் உறவாக அப்போதிலிருந்தே ஆரம்பித்து விட்டது. அடுத்த நான்கு வருடங்களுக்குள், குரு, தானறிந்த வேதத்தின் நுட்பங்கள், உபநிஷத்துக்கள் சொல்கிற நுட்பங்கள், தந்திர சாஸ்திரத்தில் சொல்லப் பட்டவை இப்படி எல்லாவற்றையும், கபாலி சாஸ்திரிக்கு, வாத்சல்யத்துடன் சொல்லிக் கொடுத்தாயிற்று.

தன்னுடைய குருவான ரமண மகரிஷியிடம் கபாலி சாஸ்திரியை நாயனா அறிமுகம் செய்து வைக்கிறார். ஸ்ரீரமணருடனான சந்திப்பு, கபாலி சாஸ்திரிக்குக் கிடைத்த பெரிய பொக்கிஷம், அவருடைய ஆன்மீக சாதனையில், அனாயாசமாக ஒரு பெரிய மலையைக் கடந்தது போல! சாதாரணமாக, எவரையும் தொட்டுப் பேசாத ஸ்ரீ ரமணர் கபாலி சாஸ்திரியின் நெஞ்சில் தன் அருட் கரத்தை வைத்து, யோகத்தில் சொல்லப் படுகிற ஹ்ருதய கமலம் இருக்கிற இடத்தைக் காட்டிக் கொடுக்கிறார். ரமணருடைய ஹஸ்த தீக்ஷை கிடைத்ததை சொன்ன போதிலும், அது அவருடைய ஆன்மீக வாழ்க்கையில் என்ன பங்கு வகித்தது என்பதை கபாலி சாஸ்திரி வெளிப்படையாகச் சொல்லவில்லை.

வாசிஷ்ட கணபதி முனிவரை "நாயனா" என்று அன்போடு அழைத்த மாதிரியே, அவருடைய சீடப் பிள்ளை கபாலி சாஸ்திரியை "சின்ன நாயனா" என்று ஸ்ரீ ரமணர் தன் வாயாலேயே அழைத்தது ஒன்றே, ஸ்ரீ ரமணர் அவரிடத்தில் எவ்வளவு கருணையும், அன்பும் கொண்டிருந்தார் என்பதை சொல்லும். ஸ்ரீ .ரமணருடைய "நான் யார்" என்ற விசார மார்க்கத்தை, நன்றாக அறிந்து கொண்டு ரமண கீதை பிரகாசம், சத் தர்சன பாஷ்யம் என்ற நூல்களைப் பின்னால், படைக்கிறார்.