என் இதய தெய்வத்துக்கு!

அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர் பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கு அருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங் கனிந்த நன்றிகள்!May The World Be Blessed For Long With The Feet Of Guru Ramana Who Abides As That Silent Principle,Which Absorbes All Of Us & Remains By It Self As The Root Of The Three Principles (SOUL, WORLD, ESWARA)Spiritual Instruction. ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

Wednesday, 20 March 2013

பகவான் ரமணர்

1. மௌனமாக இருப்பது மிகவும் நல்லது. அது ஒரு விரதம் தான். ஆனால் வாயை மட்டும் மூடிக் கொண்டு மனம் அலைபாய்ந்து கொண்டிருக்குமானால் அது மௌனமாகாது. அதானால் எந்தப் பயனும் இல்லை.
2. சாதனைக்கு தேவை சத்துவ உணவும் நல்ல சத் சங்கமுமே!. மாமிச உணவு கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும். மற்றபடி வேறு விதிகள் என்று எதுவும் இல்லை.
3. கடவுளை ஒவ்வொருவரும் அவர்களுடைய இதயத்தில் தேடினால், கடவுள் அருளும் அவர்களை நிச்சயம் தேடும்.
4. கர்த்தா ஒருவன். நாமெல்லாம் அவன் ஏவலுக்கு ஆட்பட்ட கருவிகளே! இதனை ஒவ்வொருவரும் உணர்ந்தால் பணிவு வராமல் போகாது.
5. தீமைகளைச் செய்யாதீர்கள். புதிய வாசனைகளைச் சேர்த்துக் கொள்ளாதீர். தேவையற்ற சுமைகளைச் சுமக்காமல் இருங்கள்.
6. மனதை எண்ணங்களிலிருந்து விடுவிப்பதே சாதனையின் நோக்கமாகும்.
7. குருவே ஈசுவரன். ஈசுவரனே குரு. கடவுளே குருவாய் வரும் நிலையும் உண்டு.
8. தியானத்தில் ஆன்ம தியானம் எனப்படுவதே சிறந்தது. அது சித்தியானால் மற்ற தியானங்கள் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. ஒவ்வொருவருடைய மனப் பக்குவத்திற்கு ஏற்றவாறு தியான முறைகளைக் கை கொள்ள வேண்டும்.
9. உணர்வு ஒருமைப்பட்ட தியானத்தின் போது சில வகை ஒலிகள் கேட்கும். காட்சிகள் தெரியும். ஓர் ஒளி ஊடுருவது போல் தோன்றும். ஆனாலும் இவற்றில் மயங்கி தன்னிலை இழந்து விடாமல் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும்.
10. மந்திரங்களை இடைவிடாது சொல்வதால் மனம் அடங்கும். பின் மந்திரம், மனம், மூச்சு என எல்லாம் ஒன்றே என்று ஆகும்.
11. ஆத்ம விசாரமே தவம், யோகம், மந்திரம், தவம் எல்லாம். ஒருவன் தான் யார் என்று அறிந்து கொள்ளத்தான். அதுவே மிகவும் முக்கியம்.
12. இறைவனை, ஞானத்தை ஒவ்வொருவரும் முயன்றுதான் அடைய வேண்டும்.

Friday, 15 March 2013

பகவான் ரமணரும் யோகர் சுவாமிகளும்

 
இலங்கை யாழ்பாணத்து யோகர்  சுவாமி அவர்கள்  ரமண ஆசிரமத்திற்கு விஜயம் செய்த போது இரு ஞானிகளுக்கும் இடையில் பேச்சு பரிவர்த்தனை எதுவும் இருக்கவில்லை. திரும்பி செல்லும் வழியில், வெகு நேரத்திற்குப் பின் “தீரனடா அவன்” என்று மட்டும் குறிப்பிட்டாராம். இந்த அடங்காத மனதை வழிபடுத்துவது எப்படி? ரமணகீதை ”தீரம் சேர் புத்தியினால்” என்று வழி சொல்கிறது.
தீரஞ்சேர் புத்தியினாற் சித்தத்தை மெல்ல மெல்ல
நேரச் செயவேண்டு நிச்சலன - மாரதனே

சித்தத்தை யான்மாவிற் சேர்த்திடுக மற்றெதுவு

மித்தனையு மெண்ணிடாதே மந்தி- யொத்தே (26)எதுவுந் திரமின்றி யென்றுமலை சித்த
மெதெதனைப் பற்றியே யேகு-மததினின்

றீந்த்தந்தச் சித்தத்தை யெப்போது மான்மாவிற்
சேர்த்தித் திரமுறவே செய்யிங்ஙன் - சேர்த்தே (27)இரண்டாவது பாடலை பிரித்து படித்தால் :
.
..................................... மந்தி ஒத்தே
எதுவும் (ஸ்)திரம் இன்றி என்றும் அலை சித்த(ம்)
எதெதனைப் பற்றியே ஏகு(ம்)- அததனின்(று)
ஈந்து அந்தச் சித்தத்தை எப்போதும் ஆன்மாவில்
சேர்த்து (ஸ்)திரமுறவே செய் இங்ஙன் - சேர்த்தே
ஆன்மாவை உணர்ந்த ஞானியால் மட்டுமே ஆன்மாவை உணர்விக்க முடியும். அப்படி வழிகாட்ட ஒரு குரு கிருபை கிடைக்காத வரையில் போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கும்.....

Thursday, 28 February 2013

ரமணாஞ்சலி


மஹர்ஷி ரமணர்
இன்று பகவான் ஸ்ரீ ரமணரின் ஆராதனை விழா. இன்றோடு அவர் பூத உடல் உகுத்து 62 வருடங்கள் ஆகின்றன. அவர் மறைந்தாலும் அவரது உயிர் சக்தி இன்னமும் எங்களுடன் இருப்பதாகவும், வழிகாட்டுவதாகவும் நாம் எல்லோரும் நம்புகின்றோம். பகவான் ரமணரும் கூடத் தன் இறுதிக் காலங்களில், “ஏன் வருந்துகிறீர்கள்? நான் எங்கே போய் விடப் போகிறேன்? நீங்கள் எல்லோரும் நான் இறந்து போய் விடப் போகிறேன் என்று கூறுகிறீர்கள். ஆத்மாவுக்கு இறப்பு ஏது? முன்னை விட அதிகமாக என்னுடைய இயக்கம் இருக்கும்” என்று அடியார்களுக்கு ஆறுதல் கூறினார். இன்றும் அவரது ஆசிரமத்துக்கு உள்ளன்போடு செல்பவர்கள் அவரது உயிர்ப்பை உணர்கிறார்கள் என்பது தான் உண்மை.
இனி பகவான் ரமணர் வாழ்வில் நடந்த சுவையான சில சம்பவங்களைப் பார்க்கலாம்.

மாத்ரு பூதேஸ்வரர் ஆலயம் (அன்று)
அது ரமணாச்ரமத்தின் ஆரம்ப கால கட்டம். ஒருநாள் பின் மாலை நேரம். மாத்ரூபூதேஸ்வரர் ஆலயத்தில் அப்போது இருந்த ஒரு சிறு கொட்டகையில் ரமணர் சில அடியார்களுடன் அமர்ந்திருந்தார். அவரது கையில் அவர் எழுதிய ஒரு நூலின் சில பாடல் குறிப்புகள் இருந்தன. நிறுத்தி, நிதானமாக ஒவ்வொரு அடியாகப் பாடி அவர் பக்தர்களுக்கு விளக்கமளித்துக் கொண்டிருந்தார்.

ரமணாச்ரமம் (அன்று)
ஒரு பாடலைப் பாடிய அவர் விளக்கமாக, “கடவுளை நம் கண்களைக் கொண்டு காண முடியாது. நம் புலன்களைக் கொண்டும் உணர முடியாது. இதுவே – ‘கடவுளைப் பார்ப்பதென்பது, கடவுளாகவே ஆகி விடுதல்’ என்று கூறப்படுகிறது” என்றார்.
உடனே, தண்டபாணி ஸ்வாமி என்னும் அடியவர் இடையில் குறுக்கிட்டு, “இதை பகவான் தன் சொந்த அனுபவத்தில் கூறுகிறாரோ?” என்று கேட்டார்.
உடனே பகவான். “இல்லையென்றால் சொல்லத் துணிவேனா?” என்றார்.
கேள்வி கேட்டவரும், மற்ற பக்தர்களும் பதில் பேசாமல் மௌனியாகினார்.
உடனே, தண்டபாணி ஸ்வாமி என்னும் அடியவர் இடையில் குறுக்கிட்டு, “இதை பகவான் தன் சொந்த அனுபவத்தில் கூறுகிறாரோ?” என்று கேட்டார்.
உடனே பகவான். “இல்லையென்றால் சொல்லத் துணிவேனா?” என்றார்.
கேள்வி கேட்டவரும், மற்ற பக்தர்களும் பதில் பேசாமல் மௌனியாகினார்.
இதைத் தான் வேதங்களும், உபநிஷதங்களும் “அதுவே நான்”, ”நானே அது” “அகம் பிரம்மாஸ்மி” என்றெல்லாம் குறிப்பிடுகின்றன. ஆனால் பலர் இன்னும் தன்னைப் பற்றியும் ஆராயாமல், கடவுள் என்றால் என்ன என்பது பற்றிய தெளிவுமில்லாமல் ஏதேதோ பிதற்றி தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டிருக்கின்றனர்.

இளைஞர் ரமணர்
தன்னை ஒரு பெரிய அறிவாளியாகவும், ரமணரை வெறும் சோம்பேறியாகச் சும்மா உட்கார்ந்து பொழுது போக்குகிறவருமாக நினைத்த இளைஞன் ஒருவன் ஒருநாள் ரமணாச்ரமத்திற்கு வந்தான். அங்கே எல்லாரும்  ரமணர் திருவுரு முன் அமர்ந்து அமைதியான தியானத்தில் ஆழ்ந்திருந்தனர்.
அந்த அமைதியைக் குலைத்து, தனது மேதாவிலாசத்தை அனைவருக்கும் காண்பிக்க வேண்டும் என்று நினைத்த அந்த இளைஞன், சத்தமாக ரமணரை நோக்கி, ”’ஸ்ரீ ராமகிருஷ்ணர், விவேகானந்தரிடம் கடவுளைக் காண்பிக்க என்னால் முடியும்’ என்று சொன்னார். அது போல உங்களால் கடவுளைக் காண்பிக்க முடியுமா?” என்று எகத்தாளமாகவும் கிண்டலாகவும் கேட்டான்.
அவனுக்கு ரமணரை எல்லோரது முன்னாலும் அவமானப்படுத்தி விட்டதாக ஒரு எண்ணம். கண்ணுக்கு முன்னால் கடவுள் என்ற மூலப் பிரகிருதியை நேருக்கு நேராகக் காண்பிக்க யாராலும் முடியாது என்ற எண்ணத்தால் மற்ற பக்தர்களும் பகவான் என்ன பதில் சொல்லப் போகிறாரோ என்று மிக்க ஆவலுடனும், பதற்றத்துடனும் காத்திருந்தனர்.

பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷி
பகவான் மெல்ல, “கடவுளைக் காண்பிக்க வேண்டுமா? ஓ, தாராளமாகக் காண்பிக்கலாம். அது சரி கேட்பது யார் விவேகானந்தரா?” என்றார்.
அவ்வளவுதான். முகத்தில் அறைந்தது போல் உணர்ந்தான் அந்த இளைஞன். பகவானை அவமானப்படுத்த நினைத்த அவன், அவமானப்பட்டுப் போனான்.
ஆம். யாரும், யாரையும் விமர்சிக்கலாம். கேள்விகள் கேட்கலாம். ஆனால் அதற்கு ஒரு தகுதி வேண்டும். ராமகிருஷ்ணரிடம் அதுவரை யாரும் கேட்காத – கடவுளைக் காண்பிக்க இயலுமா? – என்ற கேள்வியை சுவாமி விவேகானந்தர் கேட்டார். அவருக்கு அதற்கான தகுதியும், இறைவனைப் பற்றிய உண்மையான தேடலும், விழைவும் இருந்தது.
ஆனால், ரமணரிடம் கேள்வி கேட்ட அந்த இளைஞனுக்கு அது இல்லை. ரமண மஹரிஷியை கேள்வி கேட்டு மடக்க வேண்டும் என்பதுதான் அவன் குறிக்கோள். ஆனால் பதில் சொல்ல முடியாமல் அவன் தான் அந்த இடத்தை விட்டு எழுந்து போனான்.
அந்த அரைகுறை அறிவு மேதாவி இளைஞனைப் போலத் தான் பலர் இறைவனைப் பற்றிய தேடலும், தன்னைப் பற்றிய உண்மையான அறிவும், அவ்வாறு அறிவதற்கான விழைவும் இல்லாமல், தன் தகுதிக்கு மீறி, தன்னால் எட்ட முடியாத நிலையில் உள்ள மகான்களை, ஞானியர்களை விமர்சித்தும், குறை கூறியும் வருகின்றனர்.
உண்மையிலேயே நமக்கு அந்தத் தகுதி உண்டா?

பகவான் ரமணர்
”’தான்’ என்ற அகந்தை இருக்கும் வரை ஒருவரால் ஒருக்காலும் ஆண்டவனைப் பற்றி அறிய முடியாது” என்றார் ரமணர். முதலின் தான், தான் என்று தோன்றும் அந்த எண்ணத்தின் பிறப்பிடம் எது என்பதை அறிவாய். அதை அறிந்து கொண்டு விட்டால் பின்னர் எல்லாமே தாமே விளங்கும் என்றும் அவர் சொன்னார்.
”பந்தத்தில் இருக்கும் நீ யார்?” என்ற கேள்வி கேட்டு, அதற்கான விடையை நீ அறிந்து கொண்டால், பின்னர் வேறு கேள்விகளே தோன்றாது. உனக்கு அந்நியமாய் ஏதும் இல்லை என்பதை நீயே உணர்வாய் என்றார்.
இந்த நன்னாளில் அதற்கான முயற்சிகள் மேன்மையுறட்டும்.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாய!



 
ஸ்ரீ ரமணரின் சமாதி ஆலயத்தை முழுமையாகக் காண இங்கே சுட்டவும்.
ஸ்ரீ ரமணரைத் துதிக்கும், உள்ளத்தை உருக்கும் ரமண ஸ்துதி பஞ்சகப் பாடல்களை இங்கே கேட்கலாம்/பதிவிறக்கலாம்
பகவான் ரமணர் தனது பெரும் பகுதி வாழ்நாட்களைக் கழித்த ஸ்காந்தச்ரமத்தை இங்கே பார்க்கலாம்.
ஸ்ரீ மாத்ருபூதேஸ்வரர் ஆலயத்தைத் தரிசிக்கச் சுட்ட வேண்டியது இங்கே
ஸர்வம் ஸ்ரீ ரமணார்ப்பனமஸ்து!!

Wednesday, 27 February 2013

வலது பக்கத்தில் ஒரு இதயம்-ரமணர்

 
* பிரபஞ்சம் முழுவதும் உடலில் இருக்கிறது. உடல் முழுவதும் இதயத்தில் அடங்குகிறது. எனவே, பிரபஞ்சமே இதயத்தில் அடக்கம். உலகத்திற்குச் சூரியனைப் போன்று உடலுக்கு இதயம். சூரியன் சந்திரனுக்கு ஒளி தருவதுபோல இதயம் மனதிற்கு ஒளி தருகிறது. * சூரிய அஸ்தமனத்தின்போது சந்திர ஒளியை மட்டும் காண்பதைப் போன்று, இதயத்திலிருந்து விலகி நிற்கும்போது மனத்தை மட்டுமே காண முடிகிறது. * இதயத்தில் வசிப்பவர் மனம், பகலில் சந்திர ஒளி போன்று, இதய உணர்வில் கலந்து விளங்குகிறது. 'பிரக்ஞானம்' என்ற சொல்லுக்கு வெளிப்படையான பொருள் 'மனம்' என்றாலும், அது இதயத்தையே குறிக்கிறது என அறிஞர் உணர்வர். பரம்பொருள் இதயமே. * அறிபவருக்கும் அறி பொருளுக்கும் இடையே உள்ள வேறுபாடு மனத்தளவிலே தான் உண்டு. மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது துக்கம், பயம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தனது மூலமாகிய இதயத்திற்கு செல்கிறது. அத்தகைய கலப்பை நாம் உணர்வதில்லை. இருப்பினும் உணர்வோடு இதயத்தில் நுழையும்போது அது 'சமாதி' என்று அழைக்கப்பெறும். * இதயக் குகையின் நடுவே பிரம்மம் மட்டுமே ஒளிர்கிறது. 'நான்-நான்' என்ற நேரிடையான ஆன்ம அனுபவமே இது. ஆத்ம விசாரத்தின் மூலமோ அல்லது கலப்பினாலோ, அல்லது மூச்சடக்கத்தினாலோ இதயத்தில் நுழைந்து அதாகவே வேரூன்றி இரு.
* ஸ்தூல இதயம் இடது பக்கத்தில் இருக்கிறது என்பதை யாரும் மறுப்பதற்கில்லை. ஆனால், நான் பேசுகின்ற இதயம் வலப்பக்கத்தில் இருக்கிறது. இது எனது அனுபவம். இதற்கு வேறு சான்று தேவையில்லை.

Thursday, 21 February 2013

வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு- ரமணர்


* முற்பிறவியில் புண்ணிய வினைகளைச் செய்தவன் வாழ்வில் இன்பத்தை நுகர்ந்து மகிழ்கிறான். பாவ வினைகளை செய்தவன் துன்பத்தில் உழல்கிறான்.
* விதிப்படி தான் வாழ்க்கை நடக்கிறது. வாழ்க்கை என்பது திட்டமிட்ட கணக்கு போலத்தான்.  Balance Sheet  என்று சொல்வார்களே அதைப் போன்றது. இதை மாற்றினால் கணக்கு சரிப்பட்டு வராது. ஆண்டவனும் தான் ஏற்படுத்திய நியதியை யாருக்காகவும், எப்போதும் மாற்ற முன் வருவதில்லை.
* விதிப்படி வகுத்திருக்கும் வாழ்க்கையில், நன்மைகளைப் பெற்றால் ஆர்ப்பரிக்காமல் அமைதியோடு இரு
வாழ்வு ஒரு திட்டமிட்ட கணக்கு
, தீமை வந்தால் ஒரேயடியாகத் துவண்டு போய் வருந்தாமலும், இன்பத்தையும், துன்பத்தையும் சமமாகக் காணும் மனநிலையை ஆன்மிகம் நமக்கு கற்றுத் தருகிறது.
* பக்தியால் பக்குவம் பெற்றவர்கள் மனதில் சுகமோ, கவலையோ பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. அதோடு வரவிருக்கும் அடுத்தடுத்த பிறவிகளுக்கு வினைச் சுமைகளை சேர்த்துக் கொள்ளாமல் காப்பாற்றுவதற்கும் பக்தி துணையாக அமைகிறது. உண்மையான பக்தி தீமைகளில் இருந்து மனிதனைக் காப்பாற்றுகிறது.
அகந்தை அகலட்டும்
* நெருப்பின் சுடரிலிருந்து பொறிகள்
எழுகின்றன. ஆனால், அவை வெளியில் சிதறி விழுகின்றன. ஆனால், நாம் ஒரு போதும் கடவுளுக்கு வெளியில் இல்லை.
* சிவனடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால் நிறைந்த அமைதி கிடைப்பதுடன் ஆன்ம உணர்வு கிடைக்கிறது.
* இதயத்தில் இருக்கும் அகந்தை விலகுதலே சரணாகதி
ஆகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால்
ஏமாறுவதில்லை, அவர் காண்பதெல்லாம் அகந்தை, எந்த அளவுக்குப் பாக்கி இருக்கிறது என்பதும், அதனை எந்த அளவில் அழிக்கலாம் என்பதுமேயாகும்.
* தெய்வீகம் அனைத்துக்காலங்களிலும் அனைத்து
சூழல்களிலும் பரவி நிற்கிறது. தனி மனிதர் தன்
விருப்பம் போல் நடக்க முடியாது, தெய்வீகத்தின்
சக்தியை உணர்ந்து நடக்க வேண்டும்.
* கடவுள் அல்லது குருவிடம் ஒருவர் சரணடைந்து
விட்டால், அவர் சரணடைந்த சக்தியே அவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்கிறது. கடவுள் அல்லது குருவை நம்பாத போது தான் சந்தேகம் எழுகிறது.

சும்மா இருப்பது சிரமம்!
* கடவுளும், குருவும் உண்மையில் வேறு வேறு அல்ல, புலி வாயில் பிடிபட்டது எப்படி திரும்பாதோ, அதேபோல் குருவின் அருட்பார்வையில் விழுந்தவர்களும் கைவிடப்படமாட்டார்கள்.
* நீ விரும்புவது அனைத்தையும் பகவான் உனக்குத் தருவார் என்று நம்பினால், உன்னை அவரிடம் முழுமையாக ஒப்படைத்துவிடு.
* கடவுளை உணர்வதற்கு நாம் செய்ய வேண்டியது சும்மா இருப்பது தான், சும்மா இருப்பதைப் போல சிரமமான செயல் வேறு இல்லை.
* அமைதியே நமது இயல்பான சுபாவம். எனவே அதைத் தேட வேண்டாம். உபத்திரவப்படுத்தும் எண்ணங்களை ஒழித்தாலே போதும்.
* நாமே தான் நமது பிரச்னைகளுக்கு மூல காரணம், எனவே, நாம் யார் என்பதை நன்கு புரிந்து கொண்ட பிறகு, கடவுள் ஆராய்ச்சியில் இறங்குவது நல்ல பயன் தரும்.
* மனதை மெதுவாக சிறுகச் சிறுக அடக்கி தன் வழிக்குக் கொண்டு வரவேண்டும், இதற்கு கடும் பயிற்சியும் வைராக்கியமும் தேவை.
* அறிவு, நம்மிடத்திலுள்ள அறியாமையைப் போக்குகிறது, அது புதிதாக எதையும் உருவாக்குவதில்லை.
- ரமணர்
பிராயச்சித்தம் சொல்லட்டுமா!
* சிவனடியில் முழுமையாகச் சரணடைந்து விட்டால் அமைதியும், ஆன்மிக உணர்வும் கிடைக்கும். அந்நிலையில் நம் குறைகளைப் பற்றி முறையிடும் எண்ணம் தோன்றாது. முழுமையான பக்தியின் இயல்பு இது தான்.
* புதிய ஆசைகளை வளர்க்காதீர்கள், புதிய விஷயங்களைத் தேடி அலையாதீர்கள், நீங்கள் செய்த தவறுகளிலிருந்து மீளுவதற்கு உரிய பிராயச்சித்தம் இதுவே. ஆனால், மனிதர்களோ இதற்கு நேர் எதிர்மாறாக அலைந்து துன்பத்தில் மாட்டிக் கொள்கிறார்கள்.
* கடவுளிடமோ, குருவிடமோ சரணடைந்துவிட்டால், அவரது அருளே ஒருவரைச் சரியான பாதையில் அழைத்துச் செல்லும். அதன் பின், ஒருவர் எதற்கும் கவலைப் படத் தேவையில்லை.
* இறைவன் காப்பாற்றுவான் என்ற எண்ணத்தில் உறுதி இருந்தால் மனம் தெளிவடையும். அப்போது தவறு செய்ய இடம் உண்டாகாது.
* "கடவுளிடம் சரணடைந்து விட்டேன்' என வெறும் வார்த்தையை மட்டும் உதிர்த்து பயனில்லை. உளப்பூர்வமாக அவரிடம் சரணடைய வேண்டும்.

Friday, 25 January 2013

நான் யார்??? நான் யார்??? நீ யார்???


ஆராயச் சொல்கிறார் ரமணர்* அருளின் உயர்ந்த வடிவம் மவுனமாக இருப்பதாகும். வலிமையற்ற மனம் படைத்தவர்களுக்கு மவுனமாக இருக்க முடியாது.
* நான் யார் என்ற கேள்வியைக் கேளுங்கள். பதிலை உங்களுக்குள்ளே தேடுங்கள். பிறவியைத் தவிர்க்கும் உபாயம் இதுவே.
* குப்பையை ஆராய்வதால் பயன் விளைவதில்லை. அதுபோல, பிரபஞ்சத்தை ஆராய்வதாலும் பயன் இருக்கப் போவதில்லை. நமக்குள் இருந்து இயக்கும் ஆண்டவனைத் தேடுங்கள்.
* இறைவன் நமக்குள் இருக்கிறான் என்று தெளிவாக உணர்ந்தவர்கள் தவறு செய்வதில்லை. செய்தாலும் வருந்தி தங்களைத் திருத்திக் கொள்வார்கள்.
* அகந்தை இருக்குமிடத்தில் ஆண்டவன் ஒரு நிமிடம் கூட இருக்கமாட்டான். "நான்' "எனது' என்று எண்ணிக்கொண்டு செயலாற்றுபவர்கள் எந்தகாலத்திலும் ஆண்டவனை அடையவே முடியாது.
* ரயில் ஓடும் போது சுமையை நாம் தூக்க வேண்டியதில்லை. அதுபோல, ஆண்டவனிடம் நம்மை ஒப்படைத்த பின் உலகியல் பிரச்னைகள் நம்மைத் தீண்டுவதில்லை.
* அரை குறையாக ஆண்டவனை நம்புவதால் ஒருபயனும் இல்லை. முழுமையான சரணாகதி அடைந்தால் மட்டுமே அவன் பார்வை நம்மீது விழும்

Saturday, 29 December 2012

ஆருத்ரா தரிசன நன்னாள்.............

 
இதே நன்னாளில் தான் 133 ஆண்டுகளுக்கு முன்னால் பகவான் ரமணர், மதுரையை அடுத்த திருச்சுழியில் அவதரித்தார். திருவாதிரையை அடுத்த புனர்பூச நட்சத்திரத்தில் அவர் ஜனனம் நிகழ்ந்தது. பிரசவத்தின் போது ஒரு பார்வையற்ற கிழவி உடனிருந்தாள். அவர் ரமண அருட் குழந்தையாக அவதரித்த அச்சமயத்தில் ஒரு சில கணங்கள் மட்டும் “பேரொளி”யை தரிசிக்கும் பாக்யம் பெற்றாள். அப்பேரொளி பின்னர் அருணாசலத்தை நாடி வந்து, அங்கேயே வாழ்ந்து, அதனுடனேயே இறுதியில் இரண்டறக் கலந்தது.
அந்த ரமண ஒளி அவதரித்த இந்த நன்னாளில் அவரது அருண்மொழிகள் சிலவற்றை அவரது மொழியிலேயே நினைவு கூர்வோம்.
 
கே: ஸர்வவியாபியான ஈசுவரனைக் காண்பதெப்படி?
ப: கடவுளைக் காண்பதென்பது கடவுளாயிருப்பதே. வியாபித்தற்கு அவருக்கு அன்னியமாக ‘எல்லாம்’ என்பது இல்லை. அவரே இருக்கிறார்.
கே: நான் சரணாகதி அடைந்தால் ஈசுவரனை வேண்டுதல் தேவையில்லையா?
ப: சரணாகதியே மகத்தான பிரார்த்தனை.
கே: ஆனால் சரண்புகு முன் அவரது தன்மை இன்னதென்று அறிய வேண்டாமா?
ப: நீ விரும்புவதையெல்லாம் ஈசன் உனக்காகச் செய்வாரென்று நம்பினால், நீ உன்னை அவரிடம் ஒப்புக் கொடுத்து விடு. இல்லாவிட்டால் அவரைச் சும்மா விட்டு விடு.
கே: யோகிக்குப் பூர்வஜன்மமெல்லாம் தெரியுமா?
ப: இந்த ஜன்மத்தைப் பற்றி முதலில் உனக்குத் தெரியுமா? பூர்வஜன்மமெல்லாம் தெரியவேண்டுமென்கிறாயே! இந்த ஜன்மத்தைப் பற்றிய உண்மையை இப்பொழுது தெரிந்துகொள்; மற்ற ஜன்மங்களைப் பற்றிய உண்மையெல்லாம் தானே தெரியும். இப்போதுள்ள இச்சிற்றறிவை வைத்துக் கொண்டே இவ்வளவு கஷ்டப்படுகிறாய். இன்னும் அதிக அறிவை மனத்தில் ஏற்றிக் கொள்வானேன்! இன்னும் அதிகக் கஷ்டப்படவா?
கே: படித்தவனுக்குக் குருகிருபை தேவையில்லாததால் அவன் ஞானோதயத்துக்கு விசேஷ யோக்கியதையுடையவனல்லவா?
ப: படிப்பற்ற ஞானியின்முன் பண்டிதனும் பணிய வேண்டியதுதான். எழுத்து வாசனையில்லாதது அறிவின்மைதான். படிப்போ, கற்றும் அறிவின்மை. இரண்டு பேரும் உண்மை லக்ஷியத்தை அறிந்தவரல்லர். வேறோர் விதத்தில் ஞானியும் அறியாதவனே; ஏனென்றால் அவனுக்கு ஒரு லக்ஷியமுமில்லை.
கே: ஆத்ம ஞானமடையக் குரு உதவி செய்வாரா?
ப: குரு உன் கையைப் பிடித்துக்கொண்டு காதில் ஓதுவாரா? நீ எப்படி இருக்கிறாயோ அப்படியே அவரும் இருப்பதாக நீ எண்ணிக் கொள்ளலாம். உனக்கு உடம்பிருப்பதனால் அவருக்கும் உடம்பிருக்கிறதென்றும் உனக்கு அவர் ஏதோ பிரத்தியக்ஷ அனுகூலம் செய்வாரென்றும் நீ கருதுகிறாய். ஆனால் அவர் வேலை அந்தரங்கத்தில் ஆத்ம சம்பந்தமானது.
ஓம் நமோ பகவதே ஸ்ரீ ரமணாயா!!