என் இதய தெய்வத்துக்கு!

அனைவருள்ளும் அந்தராத்மாவாக இருந்து சற்றும் எதிர் பாராத வகையில் இந்த வாய்ப்பை எனக்கு அருளிய பத்ம பாதங்களுக்கு இந்தச் சிறியவளின் இதயங் கனிந்த நன்றிகள்!May The World Be Blessed For Long With The Feet Of Guru Ramana Who Abides As That Silent Principle,Which Absorbes All Of Us & Remains By It Self As The Root Of The Three Principles (SOUL, WORLD, ESWARA)Spiritual Instruction. ஸ்ரீ ரமணார்ப்பணமஸ்து!

Friday, 23 December 2011

அருளின் உயர்ந்த வடிவம் மௌனம்

  சிலர் எடுத்த எடுப்பிலேயே ஞானியாக விளங்க விரும்புகிறார்களே தவிர, அதற்கான பயிற்சிகளைக் கடைபிடிப்பதில்லை. பயிற்சிகளை மேற்கொள்வதில் முயற்சி முக்கியமாகும். அருளின் மிக உயர்ந்த வடிவம் மவுனமாகும். அதுவே உயர்ந்த உபதேசமாகும். இதயத்தில் அகந்தை உருகி மறைதலே சரணாகதி என்பதாகும். கடவுள் வெளிப்புறச் செயல்களால் ஏமாந்து விடுவதில்லை. அவரது நோக்கமெல்லாம், அகந்தை இன்னும் எந்த அளவுக்கு இருக்கிறது, அதை எப்படி போக்குவது என்பதுதான். மயக்கம், அதிகமான மகிழ்ச்சி அல்லது அதிகமான துக்கம், அச்சம் போன்றவற்றால் எண்ணங்கள் வலுக்கட்டாயமாக நிறுத்தப் பெறும்போது மனம் தன் மூலமாகிய இதயத்திற்குச் செல்கிறது. மனம் அலையும்போது சக்தி சிதறிப்போய் பலவீனம் அடைந்துவிடுகிறது. மனம் அலையாமல் ஒரே எண்ணத்துடன் இருக்கும்போது, சக்தி சேமிக்கப்படுகிறது. இதன் காரணமாக மனம் வலிமை பெறுகிறது. அகந்தை இருக்கும் வரைதான் தியானம் தேவை. அகந்தையின் மூலகாரணத்தைத் தேடும்போது அதன்மீது வெறுப்பு தோன்றி மறைகிறது. எஞ்சி நிற்பது ஆத்மா மட்டுமேயாகும். மனத்தை உள்நோக்கிச் செலுத்துவதில் வெற்றி பெறுவதென்பது பயிற்சியாலும் வைராக்கியத்தாலும் கிட்டுவதாகும். அது படிப்படியாக வெற்றி தரும். நம் மனம் யாரிடம் வசமாகிறதோ அவரே நமக்கு சரியான குரு ஆவார். அவரிடம் சாந்தி, பொறுமை, மன்னிக்கும் பாங்கு போன்ற நற்குணங்களும் அமைந்திருக்க வேண்டும். உடல் ஜடம்; ஆத்மா ஞான மயம். இவ்விரண்டின் சேர்க்கையானது புத்தியால் ஊகித்து அறியப்படுவதாகும்.
சாந்தமுள்ளவனே தைரியசாலி

சாந்தமுடையவன் உலகத்தில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்தவேயாம். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில் இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்? குருடர்களை வழி நடத்துபவனும், அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் கண்ணுள்ளவனல்லவா? அதுபோல, இவ்வுலக இயல்பை உணர்ந்து பரம சாந்தத்தை அடைந்தவர்களே, இவ்வுலகின் நன்மைக்குப் பாடுபடும் கடமை பூண்டவர்கள். அவ்வாறு நன்மை செய்யாமலிருக்க அவர்களால் முடியாது; * ஒரு குழந்தை தவறிக் கீழே விழும் சமயத்தில் அதைத் தூக்காமலிருக்க எந்தக் கல்நெஞ்சு உள்ளவனால்தான் முடியும்! அதுபோல, உலகத்தாரின் துன்பத்தை உள்ளபடி உணரும் ஞானக்கண் பெற்றவரன்றி, இவ்வுலகத்தாரை ஆதரிப்பார் யார்? ஆதலின், ஒருவன் இறந்த பிறகு அவன் பிணத்தில் எத்தனை வண்டிகள் ஏறிச் சென்றாலும் அந்த உயிருக்கு எப்படி அதில் வருத்தமில்லையோ, அதுபோல, 'நமதல்ல' என்று ஒதுங்கிய இந்த உடலும் உள்ளமும் இந்த உலகத்தாரின் உபகாரத்தின் பொருட்டு எவ்வளவு வருந்தினாலும், அதில், அவ்வுடம்புக்கும் உள்ளத்துக்கும் உரியவனாகிய ஞானிக்குச் சிறிதும் கவலையில்லை. அவன் உழைப்புக்கு அஞ்சான். துன்பத்துக்கும் அஞ்சான். இவ்வளவு தைரியத்தையும் குளிர்ச்சியையும் கொடுப்பது, உண்மையுணர்ச்சியாகிய சாந்தம். சாந்தம் என்பது பார்த்தால் ஏழை போல் இருக்கும்; அதாவது சக்தி அற்றதுபோல் இருக்கும். அது செய்யும் வேலை எதுவும் செய்யாது. அதற்கு உள்ள பிடிவாதமும் தைரியமும் எதற்கும் இருக்காது. சர்வ சித்திகளும் இதனாலே அடையப்படுவனவாம்.

தாழ்ந்து நடப்பதால் கேடில்லை

நல்ல மனம், கெட்ட மனம் என்று இரண்டு மனங்கள் இல்லை. மனம் ஒன்றே. வாசனைகளே சுபமென்றும் அசுபமென்றும் இரண்டு விதம். மனம் சுபவாசனை வசம் நிற்கும்போது நல்ல மனம் என்றும், அசுபவாசனை வசம் நிற்கும்போது கெட்ட மனமென்றும் சொல்லப்படும். உலக விஷயங்களிலும், பிறர் காரியங்களிலும் மனதை விடக்கூடாது. பிறர் எவ்வளவு கெட்டவராய் இருந்தாலும் அவர்களிடத்தில் துவேஷம் வைக்க இயலாது. எவ்வளவுக்கெவ்வளவு தாழ்ந்து நடக்கிறோமோ அவ்வளவுக்கவ்வளவு நன்மையுண்டு. மனதை அடக்கிக் கொண்டிருந்தால் எங்கேயிருந்தாலும் இருக்கலாம். 'நான்' என்கிற நினைவு கிஞ்சித்தும் இல்லாத இடமே சொரூபமாகும். அதுவே மவுனம் எனப்படும். என்னென்ன நினைவுகள் உற்பத்தியாகின்றனவோ அவற்றை ஒன்று கூட விடாமல் உற்பத்தி ஸ்தானத்திலேயே நசுக்கிப் போடுவதே வைராக்கியம். வைராக்கியத்துடன் தன்னுள் ஆழ்ந்து மூழ்கி ஆத்ம முத்தை அடையலாம்.எவன் தன்னையே கடவுளாகிய சொரூபத்தினிடத்தில் தியாகம் செய்கிறானோ அவனே சிறந்த பக்திமான். குருவின் அருள்பார்வையில் பட்டவர்கள் அவரால் ரட்சிக்கப்படுவாரேயன்றி ஒருக்காலும் கைவிடப்படார். எனினும் ஒவ்வொருவருக்கும் தம் முயற்சியினாலேயே கடவுள் அல்லது குரு காட்டிய வழிப்படி தவறாது நடந்து முக்தியடைய வேண்டும். முக்தியில் விருப்பமுள்ளவனுக்குத் தத்துவங்களின் விசாரணை அவசியமே இல்லை. பிரபஞ்சத்தை ஒரு சொப்பனத்தைப் போல எண்ணிக் கொள்ள வேண்டும்.எல்லா நூல்களிலும் முக்தியடைவதற்கு மனத்தை அடக்க வேண்டுமென்று சொல்லப்பட்டுள்ளபடியால் மனக்கட்டுப்பாடே நூல்களின் முடிவான கருத்து என்றறிந்த பிறகும், இன்னும் பல நூல்களை அளவின்றிப் படிப்பதால் பயனில்லை.
எல்லாம் கடவுள் செயல்
 
அது அது அதனதன் செயலைச் செய்யுமாறு அமைக்கப்பட்டிருப்பது கடவுளின் செயலாலேயே. ஜடப்பொருள்கள் கூட அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவரால் தான். சித்தப் பொருளாகிய உயிர்களும் அவற்றிற்குரிய செயலைச் செய்வது அவராலே. எல்லாம் அவர் செயல். எந்த மனிதனும் தான் நல்ல நிலையில் இருக்க வேண்டுமென்று கருதுகிறான். அதற்கென்று சில தொழில்களைச் செய்கிறான். ஆயினும் அத்தொழில்களின் பயனெல்லாம் ஒரே தன்மையையுடையனவாய் இருப்பதில்லை. எல்லாருடைய நோக்கமும் தொழிலும் ஒன்றாயிருக்க, ஏன் அதன் பயன் வேறுபடுகிறது? அங்கு கடவுள் தம் செயல் என்ற அறிவை அளிக்கிறார். அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. எவர்தான் முன்னுக்கு வருவதில் ஆசையில்லாதவர்? பிறர் விஷயத்தில் அவர்களுடைய நோக்கங்கள் எப்படியிருந்தாலும், தம் விஷயத்தில் அவர் செயலன்றி இவன் செயலென்பது உண்மையாயின், எல்லாரும் ஒரே நிலையில் இருக்க வேண்டும். நிலைமையில் வேறுபாடு காணப்பட நியாயம் இல்லை. ஆகவே, ஒரே நோக்கமுடைய ஜீவர்களுடைய நிலையில் வேறுபாடு காணப்படுவதால், எல்லாம் கடவுள் செயல் என்றே கொள்ள வேண்டும். எல்லா ஜீவர்களுடைய நோக்கமும் ஒன்றுதான்; ஆயினும், அவரவர் முயற்சி வேறுபாட்டைப் பொறுத்து நிலைமை அமைகிறது. முயற்சி என்பது அந்தந்த ஜீவர்களின் உள்ளத்தில் தோன்றும் கற்பனை தான். கற்பனைக்கு மூலமாகிய நோக்கம் ஒன்று தான் என்றாலும், முயற்சியாகிய கற்பனை வேறுபடுவதற்கான காரணம் என்ன? அதுதான் கடவுள் செயல். ஆகையால் எல்லாமே கடவுளின் செயல் தான்.

Monday, 12 December 2011

உணவின்றி விரதம் வேண்டாமே!-​ரமணர்

* "நான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் "நான்' என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால், அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும்.
* ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும். இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை.
* கடவுளும் குருவும் முக்தி அடைவதற்கான வழியை மட்டும் தான் காட்டுவார்கள். நாம் தான், அவர்கள் காட்டிய வழியில் சென்று முக்தி பெற வேண்டும்.
* நீ ஒருவருக்கு கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ ஒருவரைத் திட்டினாலோ, ஏமாற்றினாலோ உன்னையே திட்டியதும், ஏமாற்றிக் கொண்டதுமாகும். நீ பிறருக்கு தீங்கு செய்யும் போது, உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய். ஏனெனில் பிறர் வேறு, நீ வேறல்ல.
* உண்ணாவிரதம் என்பது ஒரு நோன்பு, அது மனதளவில் மட்டுமே இருக்க வேண்டும். உணவை மறுத்து பட்டினி இருந்தால், அது மனதைப் பாதிக்கச் செய்யும். ஆன்மிகவிரிவுக்கு சாத்வீகமான உணவு அவசியம்.

Friday, 9 December 2011

சாந்தமுள்ள​வனே உலகின் அதிகாரி -ரமணர்

ஒருவன் கையில் விளக்கு வைத்துக்கொண்டு நடக்கிறான். அந்த விளக்குக்கும் இவ்வுலகிலுள்ள மேடு பள்ளங்களுக்கும் ஏதாவது பகை உண்டா? இல்லை. ஆனால், விளக்குக்கும் இருட்டுக்குமே பகை. விளக்கு, இருட்டை ஓட்டி மேடு பள்ளங்களின் நிலைமையை அறிவித்து விளக்குக்கு உடையவனை ஏறியும், இறங்கியும், ஒதுங்கியும் ஜாக்கிரதையாய்ப் போகச் செய்கிறது. மேடு என் காலை இடறிற்று என்றும், பள்ளம் என்னைக் கீழே தள்ளிற்று என்னும் வீணாய் அவைகள் மீது உண்டாகும் அபவாதத்தை விலக்குகிறது. இதுபோலவே, ஒருவனுக்கு சாந்தம் உண்டாயிருக்குமாயின், அந்த சாந்தநிலை, இவ்வுலகத்தை வெறுக்கவோ, பகைக்கவோ செய்யாது.
* 'சாந்தம்' என்கிற விளக்கு இல்லாமையாலன்றோ, 'இவ்வுலகம் துன்ப மயமானது' என்று, மேடுபள்ளங்களை இகழ்வதுபோல இகழ்கின்றனர். இவ்வுலகம் முழுவதையும் ஒரு கனவாக ஒருவன் கருதி மகா சாந்தம் கொண்டவனாக இருந்தாலும் கூட, அவனை இவ்வுலக சம்பந்தம் அற்றவன் என்றோ, இவ்வுலக காரியங்களில் தலையிடாதவன் என்றோ கருதவேண்டாம்; அவனே இவ்வுலகத்திற்கு அனுகூலமான சம்பந்தம் உள்ளவன். அவனே இவ்வுலக காரியங்களில் தலையிடுவதற்கு அதிகாரி.
* சாந்தமுடையவன், உலக விஷயங்களில் தலையிடுவது இவ்வுலகிலுள்ள கோணலை நிமிர்த்துவதற்கே ஆகும். அவனே இவ்வுலகத்தைக் கண்டு அஞ்சுவானாகில், இவ்வுலகத்தை ஒரு பொருளாகக் கொண்டு எனக்கு, உனக்கு என்று போராடுகிறவர்கள் எப்படி உலகத்தைச் சீர்திருத்துவர்? அவர்களுக்குக் கண் குருடாயிருக்குமே! குருடர்களை வழிநடத்துபவனும் அவர்களுக்கு வைத்தியம் செய்பவனும் சாந்தமுள்ளவனே ஆவான்.

Wednesday, 30 November 2011

ஸ்ரீ ரமண மகிரிஷி....

நரசிம்ம சாஸ்திரி என்கிற ஆந்திர தேசத்து அந்தணர், காசி யாத்திரை செல்லும்போது, காசியில் உள்ள ஒரு விநாயகரை மனம் ஒருமித்து வணங்கினார். அப்போது, அந்த விநாயகரிடமிருந்து குழந்தை போன்ற உருவம் ஒன்று நடந்து வந்து, அவருக்குள் புகுந்துகொண்டது. விசாகப் பட்டினத்துக்கு அருகில் உள்ள தன் ஊருக்கு வரும் வரைக்கும், நரசிம்ம சாஸ்திரி அந்த கணபதி உருவத்தையே மனதில் நினைத்துக்கொண்டிருந்தார். அந்த வருடம் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைக்கு, காசியில் தரிசித்த விநாயகரின் நினைவாக 'கணபதி’ என்று பெயரிட்டார்.
மூன்று வயது வரை, கணபதிக்கு அழ மட்டும்தான் தெரியும்; பேசத் தெரியாது. உடம்பில் ஏகப்பட்ட உபாதைகள். குழந்தை நோயாளியாக, எப்போதும் அழுது கொண்டிருக்கும் குழந்தையாகவே இருந்தது. பலவித நோய்களும் குழந்தையைத் தாக்குகிறதே, என்ன செய்வது என்று யோசித்து, அந்தக் கால வைத்திய முறைப்படி உடம்பிலே ஒரு இடத்தில் சூடு போட்டனர். அதற்குப் பிறகு, கணபதி மெள்ள மெள்ள உடல்நலம் தேறினான். மிக கெட்டிக்கார குழந்தையாக இருந்தான். ஒரு விஷயத்தை ஒரு முறை சொன்னால், உடனே மனதில் தேக்கிவைத்துக்கொண்டான். படிப்பில் மிக சூட்டிகையாக இருந்தான். விரைவில் மனனம் செய்கிற யோக்கியதையைப் பெற்றான். பதினாறு வயதுக்குள் வடமொழியிலும் தெலுங்கிலும் மிகச் சிறந்த பண்டித னாக மாறினான். 18 வயதில் திருமணம் நடந்தது.
வடமொழியில் வித்தகரானதால் புராண- இதிகாசங் களும், அதில் வரும் தபஸ்விகளின் வாழ்க்கையும் அவர் மனத்தை அசைத்தன. வேத விஷயங்களை ஆழ்ந்து படித்தபோது, ஜபதபங்களே வாழ்க்கையை உன்னத நிலைக்கு அழைத்துப் போகின்றன எனும் நம்பிக்கை ஏற்பட்டது. உடம்பைத் தூய்மையாக்கி, மூச்சை சீராக்கி, அசையாமல் உள்ளுக்குள்ளே ஆழ அமர்ந்து, ஜபம் செய்வது கடவுள் தரிசனத்தைக் கொடுக்கும் என்று தெளிவாக நம்பினார். பஞ்சாட்சர ஜபம் செய்தார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் எழுதியும் பார்த்தார். பிறகு, வேலூரில் பள்ளி ஒன்றில், வடமொழி ஆசிரியராகச் சேர்ந்தார். நல்ல மாணவர்களைத் தயார் செய்து, பாரதத்தின் சக்தியைப் பெருக்க வேண்டும், உலகில் ஆன்ம விழிப்பு ஏற்பட வேண்டும் என விரும்பினார்.

மூன்று வருடங்கள் ஆசிரியராக இருந்த பிறகு, அதுவும் அலுத்துப் போய், திருவண்ணாமலைக்கு வந்து சேர்ந்தார். நிருதி லிங்கத்துக்கு அருகே அமர்ந்து, அண்ணாமலையாரைப் பற்றி பாடல்கள் எழுதியும், இடைவிடாது மந்திர ஜபம் செய்தும் கடவுளை அடையும் முயற்சியில் ஈடுபட்டார். அவர் படித்த விஷயங்கள் எதுவும் அவரை அமைதிப்படுத்தவில்லை. கடவுள் தரிசனத்தை கொடுக்கவில்லை. கடவுளை அடைய முடியும் என்கிற நம்பிக்கை மெள்ளத் தளர்ந்தது. பலகோடி ஜபம் செய்தும், மனம் ஒருமைப்படவில்லையே என்ற கவலை எழுந்தது. இன்று இல்லை, நாளை தெரிந்துவிடும், நாளையில்லை இன்னும் சில நாட்களில் புரிந்துவிடும் என்று காலம் நகர்ந்துகொண்டிருந்ததே தவிர, துருவனுக்குக் கிடைத்த இறைத் தரிசனம், அனுமனுக்கு கிடைத்த அனுபவம், வேடுவப் பெண்ணான சபரிக்குக் கிடைத்த மோட்சம் தனக்கு கிடைக்கவில்லையே என ஏங்கினார்.

படிப்பு கொடுத்த மேதைமை, குழப்பத்தைத்தான் கொடுத்தது. கடவுள் என்ற விஷயம், முயற்சியால் அடைவது அன்று என்று புரியவே வெகு நாளாயிற்று. எங்கு முயற்சி, முற்றிலும் நின்று போகிறதோ, எங்கு எந்த முயற்சியும் இல்லையோ, அங்கே அமைதி பரிபூரணமாகக் குடியேறுகிறது என்பதைப் புரிந்து கொள்ளவே நாளாயிற்று. திருவண்ணாமலையில் கூடியிருந்த ஒரு திருவிழா நாளில், அவர் துண்டு உதறி எழுந்தார். மலையில் ஒரு பாலசுவாமி இருக்கிறாராமே, அவரைத் தரிசித்து வருவோம் என்று கிளம்பினார். அவரைக் கண்டால் மனம் அமைதியாகிறது என்று சொல்கிறார்களே, அதை அனுபவிப்போம் என்று மலையேறினார்.

வெள்ளை கௌபீனம் உடுத்தி, விருபாக்ஷி குகையில் அமைதியாக அமர்ந்திருந்த பால சுவாமியைப் பார்த்ததும், உள்ளே நெகிழ்ந்தார். 'இதுவே கணபதி. இதுவே விநாயகம். நான் கணபதியல்ல; கணபதி இங்கே உட்கார்ந்திருக்கிறது’ என்று புரிந்துகொண்டார். பிள்ளையாருக்குத் தலையில் குட்டிக் கொள்வதுபோல, 'சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம் ப்ரஸன்ன வதனம் த்யாயேத் ஸ்ர்வ விக்னோப சாந்தயே’ என்று தலையில் குட்டிக்கொண்டு, பாலசுவாமியை நமஸ்கரித்தார். விநாயகருக்குச் சொல்லுகின்ற இந்த ஸ்தோத்திரம், பாலசுவாமிக்கு முற்றிலும் பொருத்தமாக இருந்தது. வெள்ளை உடை அணிந்தவரும், எல்லாம் அறிந்தவரும், பூப்போன்ற முகத்தை உடையவரும், நான்கு கைகளை உடையவரும், அதாவது மன, புத்தி, ஸித்தி, அகங்காரம் என்ற நான்கையும் உள்ளடக்கியவரும், புன்னகையான முகத்தைக் கொண்டவரும், தன்னை அண்டியவர்களின் வினையைத் தீர்த்து, நல்வழிக்குக் கொண்டு செல்பவருமான விநாயகரை வணங்குகிறேன் என்கிற அந்த வடமொழி ஸ்லோகம், கச்சிதமாக பாலசுவாமிக்குப் பொருந்தியது.

ஆனால், கணபதி சாஸ்திரி பாலசுவாமியிடம் எதுவும் கேட்கவில்லை; எதுவும் பேசவில்லை; வெறும் தரிசனத்துடன் திரும்பிவிட்டார். தொடர்ந்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும், கடவுளை அடைந்துவிடலாம், தவம் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் என்று எண்ணினார்; திட்டமிட்டார்; செயலாக்கினார். படிப்பு, ஞானம் தராது என்பது படித்தவர்களுக்குத் தெரிவதில்லை. 'படிப்பதை மறந்துவிடு’ என்று பல ஞானியர்கள் சொல்வது உண்டு. வெறுமே நூலால் எந்தப் பயனும் இல்லை என்று தபஸ்விகள் பேசுவது உண்டு. அறிந்ததிலிருந்து விடுதலை என்று உத்தமர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், இதைப் புரிந்துகொள்வதற்கு வெகு தாமதமாகிறது. படிக்கப் படிக்கச் சகலமும் தெரிந்துவிடும் என்று திடமாக நம்புகிறார்கள். படிப்பு என்பது உலக வாழ்க்கையுடன் சம்பந்தப் பட்டது. பொருளாதார வளர்ச்சிக்கு உதவுவது. சுற்றுச்சூழலுக்காகவும், அதிகாரங்களுக்காகவும், மற்றவர்களிடமிருந்து பாராட்டுக்கள் பெறுவதற்காக வும், வெற்றி என்கிற இலக்கு நோக்கி அழைத்துப் போவது. ஆனால், உலகாயத வெற்றிகள், பாராட்டுகள் நிறைவைக் கொடுப்பதே இல்லை.

வெற்றி பெற்றவர் யாரும் அமைதியாக வாழ்வதே இல்லை. வெற்றிக்கு அடுத்ததாக என்ன செய்வது, இன்னொரு வெற்றி என்றுதான் போக வேண்டியிருக்கிறது. பாராட்டு வாங்கிய பிறகு என்ன செய்வது, மேலும் பாராட்டுக்கள் வாங்க வேண்டும் என்று ஆவல்தான் எழுகிறது. உலகாயத வெற்றிகளாலோ, சொத்து பத்து சுகங்களாலோ, பாராட்டுக்களாலோ, அதிகார மேன்மையினாலோ ஒருபோதும் அமைதி கிடைப்பது இல்லை. அமைதி கிடைக்காதவரை, திருப்தி ஏற்படுவதில்லை.

எது மனிதருக்கு நிறைவு கொடுக்கிறது.... பணமா, பாராட்டா, தாம்பத்திய சுகமா, பிள்ளைப்பேறா, அதிகாரமா? இல்லை. இவை எதுவும் தருவதில்லை. அமைதி என்பது உள்ளே, நம்முடைய இயல்பாய் இருக்கிறது. அதைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். அதற்கு இடைஞ்சலாக என்ன இருக்கிறது என்று யோசித்து அப்புறப்படுத்த வேண்டும். இன்றைய தேதிக்கு நாலு கோடி ரூபாய் இருந்தால் போதும், நான் நிம்மதியாகிவிடுவேன் என்று எவர் நினைத்தாலும், ஒருநாளும் நிம்மதியடைய முடியாது. பணம் இல்லை என்பது ஒரு துக்கம். பணம் சம்பாதிக்கக் கஷ்டப்படுவது ஒரு துக்கம். பணம் சம்பாதித்த பிறகு அதை கவனமாகப் பாதுகாக்க வேண்டுமே என்று ஒரு துக்கம். அதைச் செலவு செய்யும்போதும் துக்கம். எனவே, எல்லாக் காலத்திலும், எல்லா விதமாகவும் பணம், துக்கம்தான். உலக சுகங்கள், பணத்தால் வருகின்றன. ஆனால், உலக சுகங்களால் மன அமைதி வருவதில்லை.

சுகம் அனுபவித்தவரும் அனுபவிக்காதவரும், சுகம் எது என்று கேள்வி கேட்பவரும், அமைதியை நோக்கித் திரும்புகிறார்கள். தன் படிப்பு தன்னைக் காப்பாற்றும் என்று நினைத்து, கணபதி சாஸ்திரி வாழ்ந்தார். காவியங்கள் பலவற்றை மிக எளிதாகச் செய்ததால், அவருக்குக் 'காவிய கண்டர்’ என்கிற பட்டப் பெயரும் கிடைத்தது. ஆனாலும், உள்ளுக் குள்ளே மனம் அமைதி பெறவில்லை. தன்னால் இயலாது, தன் படிப்பால் முடியாது, தன் முயற்சி யில் இது நடக்காது என்பதைப் புரிந்து கொள்ளவே அவருக்குப் பல வருடங்கள் ஆயின.

திடீரென்று ஒரு நாள், அவர் தவத்தில் இருந்து எழுந்தார். மலை நோக்கி நடந்தார். 'என்னால் இயலவில்லை; என்னால் அடைய முடிய வில்லை’ என்று உள்ளுக்குள் கதறியபடியே பால சுவாமியின் கால்களில் விழுந்து, அந்தக் கால்களை இறுகப்பிடித்துக் கொண்டார்.

''படிப்பு அகங்காரத்தைதான் வளர்த்தது. என் படிப்பு அமைதியைத் தரவில்லை. கற்றவை, கர்வத்தை தான் கொடுத்தன. அவை ஒருபோதும் உள்ளே சாந்தமாகச் செய்யவில்லை. என்னை நான் அமைதியாக வைத்துக் கொள்ளாத வரையில், இறைவன் அங்கு வந்து எப்படிக் குடியேறுவார்? இறைத் தரிசனம் எனக்கு எப்படிக் கிடைக்கும்? நான் மந்திர ஜபத்தின் எண்ணிக்கையில் உட்கார்ந்து கொண்டிருக்கிறேன்; நான் இன்றைக்கு இத்தனை முடித்து விட்டேன் என்று கர்வப்பட்டுக் கொண்டிருக்கிறேன். மற்றவரோடு இந்தக் கர்வத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். என் கர்வம் என்னை நோக்கித்தான் இருக்கிறது. மந்திரஜபத்தின் எண்ணிக்கை, என்னை நோக்கித்தான் இருக்கிறது. இறைவனை நினைப்பதற்கு மந்திரஜப எண்ணிக்கையோ, என் செயலோ உதவவில்லை. எனவே, எந்த அமைதியும் எனக்குக் கிடைக்கவில்லை.

என்னுள் இருக்கிற இந்த கர்வங்கள் எல்லாம் தொலைந்து, நான் அமைதியாக உட்கார்ந்து, உள்ளுக்குள்ளே என்னை இனம் கண்டுகொள்ள வேண்டும். தயவுசெய்து, சத்குரு, ஞானச்செல்வரே! எனக்கு இந்த உதவியைச் செய்யுங்கள். உங்கள் கால்களை இறுகப் பிடித்துக்கொள்கிறேன். நீங்கள் அமைதியை அடைந்து விட்டீர்கள் என்று உங்களின் ஒவ்வொரு அசைவும் சொல்கிறது. உங்கள் முகம் சொல்கிறது. உங்கள் பேச்சு சொல்கிறது. உங்கள் பார்வை சொல்கிறது. எனக்குள் அந்த அமைதியில்லை. அதனால் என் பார்வை, என் பேச்சு, என் அசைவு எதுவும் சரியாக இல்லை. அவை எனக்கே அருவருப்பாக இருக்கின்றன.

சத்குரு, நான் உங்களைச் சரணடைந்தேன்; உங்கள் கால்களை இறுகப் பிடித்துக்கொண்டேன்; நான் உங்கள் காலடியில் முற்றிலும் என்னை இழந்து உங்கள் வசமானேன்; நான் என்ற வஸ்து இங்கு இல்லை; சத்குரு, என்னை உங்கள் கால்களில் பொசுக்கி, அழித்து வெறுமே நிற்கிறேன். நான் எதுவும் இல்லை. நீங்கள் என்னுள் புகுந்து, எனக்குள் அமைதியை ஏற்படுத்துங்கள்'' என்று வாய்விட்டுக் கதறினார்.

அவர்கள் இரண்டு பேரும் சந்தித்த அந்த நேரம், விருபாக்ஷி குகையில் எவரும் இல்லை. மகத்தான ஒரு அமைதி மட்டுமே அங்கு நிலவியது. எழுந்து முகம் துடைத்துக்கொண்டு கணபதி சாஸ்திரி பாலசுவாமியையே பார்த்துக்கொண்டிருந்தார். பாலசுவாமியின் கருணைக் கண்கள், காவியம் கண்ட கணபதி சாஸ்திரியின் கண்களை கருணையோடு நோக்கின. 'என்னுள் இருப்பதே உன்னுள்ளும்’ என்று சொல்லாமல் சொல்லின. தன்னுள் இருக்கின்ற அந்தப் பரம்பொருளை, தன் கண்களின் வழியே, எதிரே இருக்கின்ற பரம்பொருளை நோக்கி, பாலசுவாமி செலுத்தினார்.

இது ஓர் அற்புதமான நயன தீட்சை. தான்தான் எங்கும் இருக்கிறோம் என்ற நினைப்பினுடைய விகசிப்பு. அந்தக் கண்கள் வழியே பொங்கி, கணபதி சாஸ்திரி கண்களைத் தாக்கி, அவருக்குள்ளே இருக்கிற அந்தப் பரம்பொருளைத் தொட்டு அசைத்தது. மனம் விரிந்தது. அமைதி குடியேறிற்று. இறைவன் எங்கிருக்கிறார்? எல்லா இடத்திலும் இருக்கிறார். என்னை, நான் மறைத்துக் கொண்டிருக்கின்றேன். என் கண்களை, நான் மூடிக்கொண்டிருக்கிறேன். என் கர்வம், என்னைப் பிணைத்துக் குப்புறப் போட்டிருக்கிறது. என் திமிர், என் கண்களை மறைத்துவிடுகிறது. நான் பார்க்க இயலாதவனாக, பேச இயலாதவனாக, உணர இயலாதவனாக வெறுமே பல்வேறு கலைகளில் கட்டுண்டு கிடக்கிறேன். அந்தக் கட்டுகளை அறுத்துவிட்டு நிமிர, எதிரே இறை இருப்பது தெரிகிறது.

இறைவன் பார்வை உன்னைத் தாக்குகிறது. எல்லா இடத்திலும் இருக்கிற இறைவன், உன்னை மிகுந்த கவனத்தோடு, பிரியத்தோடு அணைத்துக்கொள்கிறார். இறை என்பது உனக்கும் எனக்கும் நடுவில், எல்லோருக்கும் மத்தியில், எல்லோர் நெஞ்சிலும் உறைகின்ற ஒரு விஷயம். தெரிந்துகொள்ளத்தான் எவரும் முயற்சி செய்வது இல்லை. அப்படித் தெரிந்தவர், உன்னுள் இருக்கின்ற இறைவனை, அதோ அங்குதான் என்று சுட்டிக்காட்ட, உனக்குத் தெரிந்துவிடுகிறது. அவர் சுட்டிக் காட்டத் தயாராக இருக்கிறார். பார்க்க, உனக்கு ஒரு யோக்கியதை வேண்டும்; பார்க்க, உனக்கு ஒரு பணிவு வேண்டும்; ஒரு ஏக்கம் வேண்டும்; பார்ப்பதற்கு, உனக்கு உண்மையிலேயே ஒரு ஆசை வேண்டும்.
காவியம் கண்ட கணபதி சாஸ்திரிக்கு அந்த ஏக்கம், அந்த ஆசை வந்தது. என்ன காவியம் எழுதியிருந்தாலும், என்ன உயர்ந்திருந்தாலும், உள்ளுக்குள்ளே அமைதி ஒரு சத்குருவால் ஏற்பட வேண்டும் என்று அவர் காலடியைப் பற்றிக் கதறியபோது, உள்ளே அமைதி தோன்றியது. இது யார், எதிரே அமர்ந் திருப்பது யார் என்று மிகப் பெரிய வியப்போடு அவர் பார்க்கத் துவங்கினார். இதுவரை இல்லாத பார்வையாக அது இருந்தது. இது ரமணம். இது ரம்மித் திருப்பதால், ரமணம். இவர் சாதாரணர் அல்ல. இவர் ரமணர். ஸ்ரீரமணர். சாதாரண ஸ்ரீரமணர் அல்ல; இவர் பகவான்; கடவுளின் உருவம்; கடவுளின் அவதாரம்; தன்னுள்ளே கடவுளைக் கண்டு தானே கடவுளாக இருப்பவர். இவர் பகவான். இவர் மிகப் பெரிய தபஸ்வி.
பல ஜென்மங்களில் செய்த தபத்தின் பயனாக, இப்போது எளிதில் தனக்குள் இறைவனைத் தேக்கி வைத்திருப்பவர். இவர் ரிஷி. மகரிஷி. பகவான் ஸ்ரீரமணர் என்று அவரை காவிய கண்ட கணபதி சாஸ்திரி கொண்டாடினார். அவர் அன்று சொன்ன ஸ்ரீரமணர் என்ற வார்த்தை வேங்கடராமன் என்ற, திருச்சூழியில் இருந்து வந்த அந்த இளைஞனுக்கு மிகச் சரியான பட்டமாக அமைந்தது. அதன்பின் அவரை வெறுமே சாமி, ஐயா என அழைக்காமல், பகவான் ஸ்ரீரமண மகரிஷி என்று எல்லோரும் அழைக்கத் தொடங்கினார்கள்.
இமயமலை தன் சிரசில் குளிர் மேகத்தைச் சூட்டிக் கொண்டதுபோல, சத்தியம் தனக்கு ஒரு பெயரைச் சூட்டிக் கொண்டது. அவரைச் சுற்றியுள்ளவர்கள் பாக்கியவான்கள். அன்று சூட்டிய பெயரைத் திரும்பத் திரும்பக் கூப்பிடு பவர்கள் பாக்கியவான்கள்

Saturday, 26 November 2011

நல்லதே நம் கண்ணில் படட்டும்!

எல்லா உயிர்க்கும் செந்தண்மை பூண்டு ஒழுகுப‌வர் ஸ்ரீ ரமண மஹர்ஷி. அவரிடம் அணிலும், குர‌ங்கும், பசுவும்,மயிலும் அன்புடன் பழகும். அவற்றின் மொழி அவருக்கு நன்கு விளங்கும்.
அன்று காலையும் பகவான் ஸ்ரீ ரமணர் வழக்கும் போல் தன்னுள் தானே ஆழ்ந்து ஆனந்த பரவசத்தில் மெள‌னமே மொழியாக அம்ர்ந்து இருந்தார்.அப்போது ஊருக்குள் இருந்து ஒரு துக்க செய்தி வந்து சேர்ந்தது.அது இறப்பு என்பதால் துக்கம் என்று சொன்னேன். உண்மையில் அந்த துக்கத்தைப் பற்றி ஊருக்குள் மகிழ்ச்சியே
ஏற்பட்டது.
இறந்தவர் ஊருக்குள் பெரிய சண்டியர்.கட்டப் பஞ்சாயத்து,கந்துவட்டி, அடிதடி, அராஜகத்திற்குப் பெயர் போனவர் அவர்.பலருடைய சொத்துக்களை அநியாயமாகப் பறித்துச் சாலையில் நிறுத்திய பெருமை அவருக்கு உண்டு.தொழில்களைச் செய்யவிடாமல் பல குடும்பங்களைப் பட்டினியில் தள்ளி தற்கொலை வரை விரட்டிய
"புண்ணியச்செயலை"ச் செய்தவர் அவர். அவர் செய்த கொடுமைகளைச் சொல்லப் புகுந்தால் அது மஹாபாரதத்தில் வரும் துரியோதனன் , துச்சாதன‌ன் எல்லாம் சுண்டைக்காய் என்ற எண்ணம்
நமக்குத் தோன்றிவிடும்.
அப்படிப்பட்ட "புண்ணியாத்மா" மறைந்து விட்டார்.
ஸ்ரீரமண மஹரிஷி அமைதியாக அமர்ந்திருந்தார்.ஊருக்குள் இருந்து ஆஸ்ரமத்திற்குப் ப‌லரும் வர ஆரம்பித்தார்கள். ஒவ்வொருவரும் வந்தவுடன், "சுவாமி செய்தி கேள்விப்பட்டீர்களா? அந்தப் பாவி போய்விட்டான்...!"
மஹரிஷி சலனம் இல்லாமல் இருந்தார். அடுத்த நபர் வருவார். அவரும் மீண்டும் தகவலை மகிழ்ச்சியுடன் சொல்வார். அப்போதும் மஹரிஷி எந்த சலனமும் இல்லாமல் ,முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் அமைதிகாப்பார்.
இது மாலை வரை தொடர்ந்தது சுமார் 50 பேராவது மஹரிஷியிடம் இந்த ஒரே செய்தியைச் சொல்லி இருப்பார்கள். யாருக்குமே மஹரிஷி பதிலும் அளிக்கவில்லை;முகத்தில் மகிழ்ச்சியோ, துக்கமோ காட்டவில்லை.
மஹரிஷி கல்லைப்போல இருப்பதைக் காண்டு பக்தர்கள் சலிப்புக் கொண்டார்கள்.
மஹரிஷி அந்த இறந்தவரைப் பற்றி என்னதான் மனதில் நினைக்கிறார் என்பதை அறிய ஆவல் கொண்டார்கள்
பக்தர்கள்.மஹரிஷியோ இந்த விஷ்யத்தில் காஷ்ட மெளனம் சாதித்தார்.
அந்தி சாய்ந்த உடனே அந்த இறந்த நபருடைய பூத உடல் அவருடைய உறவினர்களால் மயானத்திற்குக் கொண்டு
செல்லப் பட்டது.அந்தத் துக்க‌ ஊர்வலம் ஆஸ்ரமத்தைத் தாண்டிக்கொண்டு சென்ற‌து.ஆஸ்ரமத்திற்கு முன்னால் ஊர்வலம் வந்த போது, ஸ்ரீரமணர் எழுந்து நின்றூ மரியாதை செய்தார்.மேலும் பூதஉடலை நோக்கிக் கைகூப்பி வணங்கினார்.
பார்த்துக் கொண்டிருந்த ஒரு பக்தருக்குக் கோப‌மே வந்து விட்டது. சற்றும் தயங்காமல் தன் கோப‌த்தை கொட்டிவிட்டார் அந்த பக்தர்.
"என்னங்க‌ சாமி!? அவனோ அயோக்கியன்.அவனப் போயி கும்பிடறீங்களே!? அது ஏன்னு சொல்லுங்க சாமி!"
மஹரிஷி ஒன்றும் சொல்லவில்லை. பக்தர் விடுவதாக இல்லை. மீண்டும் மீண்டும் 'ஏன் ஏன்' என்று கேட்டுப் பின் தொடர்ந்தார். அந்த பக்தரின் தொல்லை தாங்காமல் மஹரிஷி தன் மெள‌னத்தைக் கலைத்தார்.
"இறந்தவர் என்னுடைய ஒரு குரு!" என்றார் மஹரிஷி.
"என்னது!அந்த சண்டியன் உங்களுக்கு குருவா?" "ஆமாம்! அவரிடமிருந்துதான் உடல் சுத்தம் பற்றி நான் அறிந்து கொண்டேன். நான் திருவண்ணாமலைக்கு வரும் போது எனக்கு 12 வயதுதான். அதுவரை வீட்டில் அம்மாதான் எனக்கு முதுகு தேய்த்து தண்ணீர் ஊற்றிக் குளிப் பாட்டுவார்கள்.எப்படி குளிக்க வேண்டும் என்பது கூட அறியாத வயது எனக்கு. அப்போதுதான் அந்த நபர் குளத்தில் வந்து குளிப்பதை வேடிக்கை பார்ப்பேன். எப்ப‌டி நாமே முதுகைத் தேய்ப்ப‌து கைவிரல் கால் விரல் காது
மூக்கு என்று ஒவ்வொரு பாகத்தையும் பார்த்து பார்த்து தேய்த்துக் குளிப்பார். நானும் அதுபோல குளிக்க அவரைப் பார்த்துத் தான் கற்றுக்கொண்டேன். எனவே அவர் எனக்கு உடல் சுத்தம் பற்றி அறிவுறுத்திய குரு ஆவார்."
பகவான் ஸ்ரீ ரமணர் அளித்த விளக்கத்தைக் கேட்டு பக்தர்கள் அமைதி ஆனார்கள்.
எவ்வளவு மோசம் ஆனவர்களிடம் ஏதாவது ஒரு நல்லது இருக்கும். நல்லவர்கள் கண்களுக்கு அந்த நன்மையே கண்ணில் படும்.
நல்லதே நம் கண்ணில் படட்டும். அல்லவை நமக்குப் புலனாகமலே போகட்டும். இந்த வேண்டுதலை ஸ்ரீரமணரிடம் சமர்ப்பிப்போம்

Wednesday, 9 November 2011

அகங்காரம் இருக்கும் வரை முக்தி இல்லை-ரமணர்

பாலும் நீரும் கலந்தது போன்றது உலகம். நீங்கள் ஓர் அன்னம் போன்று இருந்து, நீரைத் தவிர்த்து பாலைப் பருகுங்கள். ஏகாந்தத்திலே (தனிமை) இருந்து நீங்கள் தியானம் புரியும்போது உங்கள் குடும்பத்தவரிடமிருந்து உங்களை முற்றிலும் பிரித்துக் கொண்டு தனித்திருங்கள். இல்லறத்தாருக்கு ஜீவர்களிடத்து அன்பு, பக்தர்களுக்குச் சேவை; கடவுளின் புனித நாம உச்சாடனம் ஆகியவை கடமைகளாகும். பணம் நமக்குப் பெற்றுத் தருவதெல்லாம் சோறும், கறியுமேயாகும். பணத்தையே உங்களுடைய உயிரும் உடலுமெனவோ, உங்களது ஒரே குறியும் நோக்கமும் எனவோ கருதாதீர்கள். அகங்காரம் இருக்கும் வரையில் ஞானமும் முக்தியும் கைகூடாது; பிறப்பும் இறப்பும் இருந்தே தீரும்; நீங்காது.இல்லறத்தில் நம்பிக்கை கொள்ளுங்கள். கடவுளை நம்பி இருங்கள்; பின்னர் நீங்களாக எதையுமே செய்ய வேண்டியிராது. அன்னை காளி உங்கள் பொருட்டு யாவற்றையும் தாமே செய்வாள். சம்சாரமாகிய பெருங்கடலில் ஆறு முதலைகள் உள்ளன. காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் என்பவையே அந்த முதலைகளாம். பெண்ணாசையை ஒழித்தவன் உலகத்தையே துறந்தவன் ஆவான். அவனுக்கு இறைவன் வெகு அருகில் இருக்கிறார்.மாயை என்பது தாய், தந்தை, சகோதர, சகோதரிகள், மனைவி, மக்கள், உற்றார், உறவினர் முதலியவர்களிடம் ஒருவனுக்கு உண்டாகும் பாசமாகும். எல்லா உயிர்களிடமும் சமமாகப் பரவும் அன்புக்கு தயை என்று பெயர்.

Friday, 28 October 2011

Seat of Arunachala Ramana

When the skull was sealed I experienced a brilliant light, like that of an arc lamp, and an indescribable joy and coolness filled my being. This light and joy continued for several hours. During this time I didn't move about and I was unconscious of what was going on around me. You may have seen a light focused on to a concave mirror. Its light is reflected with a single beam onto a point. Well, sometime about midnight all the light, like a concave mirror, was focussed onto the Heart. Then all the light drained into the Heart. The Kundalini was completely sucked into the Heart and the Heart was opened - that is the seat of Arunachala Ramana.

- Sri Ramana Maharshi